கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்து போனதால் வாக்கு எண்ணிக்கை துவங்கவில்லை.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 19-ம் தேதி ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதனையொட்டி கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் பதிவுசெய்யப்பட்ட வாக்குப் பெட்டி எந்திரங்கள் பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு கடலூர் புனித வளனார் பள்ளி மற்றும் அந்தந்த நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஆனால் கடலூர் மாநகராட்சியில் புனித வளனார் பள்ளி மையத்தில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்து போனதால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியுள்ளது. இதனால் அங்கே பரபரப்பு நிலவுகிறது.
இதேபோல் கிருஷ்ணன்கோயிலில் உள்ள மையத்தில் சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்