மதுரையில் குல்பி ஐஸ் விற்பனை செய்தும், அடி பம்பில் தண்ணீர் அடித்துக் கொடுத்தும் நூதன முறையில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19 ஆம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் களம் காணும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி 73வது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிடும் மணிகண்டன், முத்துப்பட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது உணவகத்தில் புரோட்டோ சுட்டும், சிக்கன் 65 தயார் செய்தும், குல்பி ஐஸ் கடையில் குல்பி ஐஸ் விற்பனை செய்தும் ,பாப் கார்ன் விற்பனை செய்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதேபோல் 83வது வார்டில் போட்டியிடும் அதிமுக. வேட்பாளர் ரவி, எம்.கே.புரம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதிக்கு மூதாட்டி ஒருவர் அடிபம்பில் தண்ணீர் அடிக்க சிரமப்பட்டதை பார்த்த வேட்பாளர் அடிபம்பை சரிசெய்து கொடுத்து தண்ணீர் அடித்து கொடுத்தும் முதியவர்களின் காலில் விழுந்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
14-வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சாந்தி உணவகம் ஒன்றில் வாக்கு சேகரித்தார். அப்போது பணியாரம் சுட்டும் அதனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையடுத்து 77-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ராஜ்பிரதாபன், உலக உருண்டை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வந்தார். அப்போது அந்தப்பகுதியில் இட்லிமாவு விற்றுக்கொண்டிருந்த மூதாட்டியிடம் ஆதரவாக இட்லி மாவு வற்பனை செய்து வாக்கு சேகரித்தார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்