காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமது கானின் கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுபற்றி நேற்று தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜமீர் அகமது கான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''இந்தியாவில் எங்கு பார்த்தாலும், பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிகமாக காணப்படுகிறது. பாலியல் தொல்லைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவே முஸ்லிம் மாணவிகள், பெண்கள் புர்கா அணிகின்றனர். அவர்கள் தங்கள் அழகை மறைத்து பாலியல் தொல்லைகள் நடைபெறாதவாறு காத்து கொள்கின்றனர்'' என்று கூறினார்.
ஜமீர் அகமது கானின் கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக ஜமீர் அகமது கான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதைக் கண்டு நான் கவலையும் பயமும் அடைகிறேன். நமது சமூகத்தின் இந்த நிலை காரணமாக, குறைந்த பட்சம் பர்தா-ஹிஜாப் அணிந்திருந்தாலும், பாதுகாப்பாக இருக்க முடியும் என்றுதான் கூறினேன். இது யாரையும் புண்படுத்தும் நோக்கமோ அல்லது அவமரியாதை செய்யும் நோக்கமோ இல்லை. யாரையாவது புண்படுத்தியிருந்தால் நான் வருந்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறுகையில், ''ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் யாரும் இதுபற்றி கருத்து கூறக்கூடாது என்று காங்கிரஸ் பிரமுகர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கருத்து கூறியதற்கு ஜமீர் அகமது கான் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இதையும் படிக்க: ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் - அனுமதிக்க மறுத்த ஆசிரியர்கள்.. கர்நாடக பள்ளியில் பரபரப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2QMEh5Oகாங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமது கானின் கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுபற்றி நேற்று தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜமீர் அகமது கான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''இந்தியாவில் எங்கு பார்த்தாலும், பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிகமாக காணப்படுகிறது. பாலியல் தொல்லைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவே முஸ்லிம் மாணவிகள், பெண்கள் புர்கா அணிகின்றனர். அவர்கள் தங்கள் அழகை மறைத்து பாலியல் தொல்லைகள் நடைபெறாதவாறு காத்து கொள்கின்றனர்'' என்று கூறினார்.
ஜமீர் அகமது கானின் கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக ஜமீர் அகமது கான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதைக் கண்டு நான் கவலையும் பயமும் அடைகிறேன். நமது சமூகத்தின் இந்த நிலை காரணமாக, குறைந்த பட்சம் பர்தா-ஹிஜாப் அணிந்திருந்தாலும், பாதுகாப்பாக இருக்க முடியும் என்றுதான் கூறினேன். இது யாரையும் புண்படுத்தும் நோக்கமோ அல்லது அவமரியாதை செய்யும் நோக்கமோ இல்லை. யாரையாவது புண்படுத்தியிருந்தால் நான் வருந்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறுகையில், ''ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் யாரும் இதுபற்றி கருத்து கூறக்கூடாது என்று காங்கிரஸ் பிரமுகர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கருத்து கூறியதற்கு ஜமீர் அகமது கான் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இதையும் படிக்க: ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் - அனுமதிக்க மறுத்த ஆசிரியர்கள்.. கர்நாடக பள்ளியில் பரபரப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்