உக்ரைனுக்குள் நுழைந்தால் ரஷ்யா மிக கடுமையான விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் எல்லையில், ரஷ்யா படைகளை குவித்துள்ளது குறித்து, நியூ யார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவை கூட்டத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அமெரிக்க பிரதிநிதி லிண்டா தாமஸ், ரஷ்யாவின் நடவடிக்கைகள் யாவும் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
உக்ரைன் எல்லையில், ரஷ்யா படைகளை குவித்துள்ளது உலக அமைதிக்கே எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக குறிப்பிட்ட லிண்டா, உக்ரைனுக்குள் ரஷ்யா நுழைந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்தார். அதேநேரத்தில், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாக ரஷ்ய தூதர் வைஸ்லி குற்றம்சாட்டினார். உக்ரைனுக்குள் நுழையப் போவதில்லை என ரஷ்யா கூறிய நிலையில், ஐரோப்பிய நாடுகள் போரை விரும்புகின்றன என அவர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக ரஷ்யா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தலாமா என நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா நடுநிலை வகித்தது. 10 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், ரஷ்யாவும், சீனாவும் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் பேசிய இந்தியாவுக்கான தூதர் திருமூர்த்தி, உக்ரைன் விவகாரத்தை தூதரக ரீதியிலாக அணுக வேண்டும் என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்