உத்தரப்பிரதேசத்தில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று நிறைவடைகிறது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் தொடங்கியுள்ளது. இதில் முதல் கட்டத்தில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இத்தேர்தலில் சுமார் 60% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில் 2ஆம் கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் களத்தில் 584 வேட்பாளர்கள் உள்ளனர். இதற்காக கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த பரப்புரை இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படுத்த மாநில காவல் துறையினருடன் துணை ராணுவப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவாவிலும் நாளை மறுநாள் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரையும் இன்று மாலையுடன் ஓய்கிறது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்