வெளவால்களில் காணப்படும் நியோகோவ் என்ற புதிய வகை கொரோனா தொற்று மனிதர்களுக்கு பரவினால் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தென் ஆப்ரிக்காவில் வெளவால்கள் மத்தியில் பரவிவரும் நியோகோவ் வகை கொரோனா மெர்ஸ் சுவாச கோளாறை ஒத்து இருப்பதாக வுஹான் பல்கலைக்கழகம் மற்றும் அகடமி ஆஃப் சையின்ஸஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோபிசிக்ஸ் -ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் உருமாறினால் மனிதர்கள் மத்தியில் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பரவினால் அந்த வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வைரஸால் பாதிக்கப்படும் மூவரில் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆய்வை பிற ஆய்வாளர்கள் இதுவரை உறுதி செய்யவில்லை. இதனிடையே நியோகோவ் வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''நியோகோவ் வகை கொரோனா வவ்வாலில் இருந்து வவ்வாலுக்கு பரவக்கூடியது. நியோகோவ் கொரோனா தொடர்பாக தேவையற்ற கருத்துக்களைப் பகிர வேண்டாம். தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பாதுகாப்பு என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். இன்று (ஜன.29) வரை கொரேனாவால் உயிரிழந்த 730 பேரில் 435 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 5% பேர் மட்டுமே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/R93f2wbmyவெளவால்களில் காணப்படும் நியோகோவ் என்ற புதிய வகை கொரோனா தொற்று மனிதர்களுக்கு பரவினால் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தென் ஆப்ரிக்காவில் வெளவால்கள் மத்தியில் பரவிவரும் நியோகோவ் வகை கொரோனா மெர்ஸ் சுவாச கோளாறை ஒத்து இருப்பதாக வுஹான் பல்கலைக்கழகம் மற்றும் அகடமி ஆஃப் சையின்ஸஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோபிசிக்ஸ் -ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் உருமாறினால் மனிதர்கள் மத்தியில் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பரவினால் அந்த வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வைரஸால் பாதிக்கப்படும் மூவரில் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆய்வை பிற ஆய்வாளர்கள் இதுவரை உறுதி செய்யவில்லை. இதனிடையே நியோகோவ் வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''நியோகோவ் வகை கொரோனா வவ்வாலில் இருந்து வவ்வாலுக்கு பரவக்கூடியது. நியோகோவ் கொரோனா தொடர்பாக தேவையற்ற கருத்துக்களைப் பகிர வேண்டாம். தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பாதுகாப்பு என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். இன்று (ஜன.29) வரை கொரேனாவால் உயிரிழந்த 730 பேரில் 435 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 5% பேர் மட்டுமே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்