முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்திலிருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கூட்டத்திலிருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ''மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதன் பேரில் பாஜக சார்பில் நான் கலந்துகொண்டேன்.
கூட்டம் தொடங்கியதும், நீட் தேர்வு விவகாரத்தில் எங்கள் கட்சியின் நிலைபாட்டை தெரிவித்துவிட்டு, இந்த தீர்மானத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என கூறிவிட்டு வெளிநடப்பு செய்துள்ளோம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் நீட் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வால் சமூக நீதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. நீட் தேர்வினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது" என்றார் வானதி சீனிவாசன்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்