’’நீங்கள் ஒரு குழந்தையை வளர்க்க முடியாதவராக இருந்தால் ஆதவரற்ற குழந்தையை தத்தெடுக்கலாம்; குழந்தைகள் உங்களுடைய குணநலன்களை பெறவேண்டும் - இது ஒரு நாசீசிஸ்டிக் ஈகோ’’ என எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் வாடகைத்தாய் குறித்த தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
நடிகை பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாக அறிவித்த 24 மணிநேரத்திற்குள் எழுத்தாளர் தஸ்லிமா இந்த கருத்தை பதிவிட்டிருக்கிறார். இதற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் கிளம்பியவண்ணம் இருக்கின்றன.
தஸ்லீமா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ஏழைப்பெண்கள் இருக்கிறதால்தான் வாடகைத்தாய் முறை சாத்தியமாகிறது. வசதியானவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக சமூகம் வறுமையில் இருப்பதையே விரும்புகின்றனர். நீங்கள் ஒரு குழந்தையை வளர்க்க முடியாதவராக இருந்தால் ஆதவரற்ற குழந்தையை தத்தெடுக்கலாம்; குழந்தைகள் உங்களுடைய குணநலன்களை பெறவேண்டும் - இது ஒரு நாசீசிஸ்டிக் (தன்னை சுற்றித்தான் உலகம் இயங்குகிறது என்ற அகந்தை) ஈகோ’’ என்று பதிவிட்டிருந்தார்.
How do those mothers feel when they get their readymade babies through surrogacy? Do they have the same feelings for the babies like the mothers who give birth to the babies?
— taslima nasreen (@taslimanasreen) January 22, 2022
தொடர்ந்து, ‘’வாடகைத்தாய் மூலம் ரெடிமேட் குழந்தையை பெறும் தாய்மார்கள் எப்படி உணருகிறார்கள்? குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களைப் போன்ற உணர்வு அவர்களுக்கு குழந்தைகள்மீது இருக்குமா?’’ என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.
தஸ்லீமாவின் இந்த கருத்து ட்விட்டரில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதோ அல்லது தத்தெடுப்பதோ ஒரு தம்பதியின் சொந்த தனிப்பட்ட முடிவு என்றும், சில மருத்துவக்காரணங்களால்கூட வாடகைத்தாய் முறை தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

வாடகைத்தாய் முறை என்பது கணவன் - மனைவியின் கருமுட்டை மற்றும் விந்தணு எடுக்கப்பட்டு, மருத்துவமுறைகள் மூலம் கரு உருவாக்கப்பட்டு, மற்றொரு பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும். வாடகைத்தாய் என அழைக்கப்படும் அந்த பெண் குழந்தையை பெற்றெடுத்து பெற்றோரிடம் கொடுத்துவிடுவார். இது பெரும்பாலும் தம்பதி மற்றும் ஒரு பெண்ணுக்கு இடையேயான ஒப்பந்த முறை. குழந்தை பெற்றபிறகு வாடகைத்தாய் குழந்தையை சொந்தம் கொண்டாட முடியாது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்