கேரளாவில் கொரோனா நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.
புதிதாக 34 ஆயிரத்து 199 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதம் 37.17 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் புதிதாக 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 160 ஆக உயர்ந்தள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வந்தபோதிலும், 3.2 விழுக்காடு அளவுக்கே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதே நேரம் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிதாக 54 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: உச்ச நீதிமன்றத்தில் வேகமாக பரவும் கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட 8 நீதிபதிகள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்