கொரோனா அச்சத்தால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்க ஆலோசனைகளை வழங்குமாறும், நோயின் தன்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் நடந்த தற்கொலை சம்பவத்தை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கொரோனாவுக்கான மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாமல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையையும், பொருளாதார நிலையையும் ஆராய்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு அரசு உதவி புரிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அரசின் கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை செய்ய அரசு நிர்வாகம் தவறுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்