அம்மா மினி கிளினிக்கில் பணியிலிருந்த மருத்துவர்கள் வேறு மருத்துவமனைக்கு பணியமர்த்தப்பட்டது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். அப்படி பேசுகையில், “கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் திட்டம், ஒராண்டு திட்டத்தின்படி தான் கொண்டு வரப்பட்டதுதான். தற்போது அதன் தேவை இல்லை. அதனால்தான் அதிலிருந்த மருத்துவர்கள் கொரோனா பணியில் அமர்த்தப்பட்டுவிட்டனர்” என தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் இருக்கும் பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் இன்று காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அவருடன் அமைச்சர் சேகர்பாபு, செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “தற்போது சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை கருத்தில்கொண்டு, கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சையும் அளிப்பதற்காக பெரியார் திடலில் இந்த சித்த மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த கொரோனா அலையின்போது இது செயல்பட்டது. அந்தவகையில், இந்த வருடமும் இது உதவியாக இருக்கும்.
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டவர்களில் அறிகுறிகளேதும் இல்லாமல் இருப்பவர்கள் மற்றும் இரண்டு தடுப்பூசி போட்டு, அறிகுறி இல்லாமல் இருப்பவர்கள் ஆகியோர் மருத்துவர்கள் அறிவுரையுடன் வீட்டுத்தனிமையில் இருக்கலாம். தமிழகத்தில் கொரோனா பரவலை கண்காணிக்க மண்டலம் வாரியாக மருத்துவகுழு செயல்பட இருக்கிறது. மேலும் வீட்டுத்தனிமையில் இருப்போரை கண்காணிக்கும் பணிக்கும் மருத்துவ குழு செயல்பட இருக்கிறது. இரண்டு நாள்களில் அது நடைமுறைக்கு வரும். நேற்று மட்டும் தமிழகத்தில் 3,35,000 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. குழந்தைகளை கண்டு, பொதுமக்களும் தடுப்பூசி போட விழிப்புணர்வு பெற்று தாமாக முன்வர வேண்டும்” என்றார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று பெரியார் திடலில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டது. #masubramanian #TNhealthminister pic.twitter.com/welj0nKhB6
— Subramanian.Ma (@Subramanian_ma) January 4, 2022

இதைத் தொடர்ந்து அம்மா மினி கிளினிக் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் “அம்மா மினி கிளினிக் தொடங்கும்போதே ஒராண்டு செயல்பாடு தான் என்றே அதை தொடங்கி இருக்கிறார்கள். மேலும் அப்போதே பல இடத்தில் இது தற்காலிக மருத்துவமனையாகதான் இருந்திருக்கிறது. இதன்பின்னர், இந்த ஆட்சியில் தற்போதைக்கு பல நீண்டகால மருத்துவ திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அந்தத் திட்டங்களுக்கு மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். ஆகவே அம்மா மினி கிளினிக் திட்டத்தில் இருந்த மருத்துவர்கள், தற்போது பிற பணிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தொடக்கமாக, கொரோனா பணியில் மார்ச் 31 வரை செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் கூடுதலாக 1,820 பேர் சேர்க்கப்பட்டு, அனைவருமே இப்போது கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
அதிமுகவினரால், மினி கிளினிக் மூலம் எவ்வளவு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற புள்ளிவிவரத்தை தரமுடியுமா? திட்டம் தொடங்கப்பட்டு அவர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த 6 மாதத்தில் எவ்வளவு பேர் அந்த கிளினிக் மூலம் சிகிச்சை பெற்றனர் என அவர்களால் தெரிவிக்க முடியுமா?” எனக்கேட்டார். தமிழகத்தில் தேவையான 27 லட்சம் தடுப்பூசி கையில் இருக்கிறது. சிறார்களுக்கும் போதுமான தடுப்பூசி இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி: வேகமெடுக்கும் ஒமைக்ரான் பரவல்: கூடுதல் கட்டுப்பாடுகள்? - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்