15 வயது முதல் 18 வயதிலான சிறாருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்.
கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் உலகநாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதற்கான இணையதள முன்பதிவு நேற்று தொடங்கியது. இந்நிலையில், சிறாருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை ஜோன்ஸ் சாலையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3pJxbuF15 வயது முதல் 18 வயதிலான சிறாருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்.
கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் உலகநாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதற்கான இணையதள முன்பதிவு நேற்று தொடங்கியது. இந்நிலையில், சிறாருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை ஜோன்ஸ் சாலையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்