குடியரசுத் தின அணிவகுப்பு மற்றும் ஒத்திகை நடைபெறுவதால் நான்கு நாட்களுக்கு சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
வருகிற 20, 22, 24 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகையும், 26ஆம் தேதி குடியரசுத் தின அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. இந்த நான்கு நாட்களும் காலை 6 மணி முதல் அணி வகுப்பு முடியும் வரையில் அதாவது காலை 9.30 மணி வரையில் காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது என சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.
அடையாறு பகுதியில் இருந்து பிராட்வே நோக்கிச் செல்லும் வாகனங்கள் லஸ் சந்திப்பு, அண்ணாசாலை வழியாக திருப்பிவிடப்படும். அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3539WUKகுடியரசுத் தின அணிவகுப்பு மற்றும் ஒத்திகை நடைபெறுவதால் நான்கு நாட்களுக்கு சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
வருகிற 20, 22, 24 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகையும், 26ஆம் தேதி குடியரசுத் தின அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. இந்த நான்கு நாட்களும் காலை 6 மணி முதல் அணி வகுப்பு முடியும் வரையில் அதாவது காலை 9.30 மணி வரையில் காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது என சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.
அடையாறு பகுதியில் இருந்து பிராட்வே நோக்கிச் செல்லும் வாகனங்கள் லஸ் சந்திப்பு, அண்ணாசாலை வழியாக திருப்பிவிடப்படும். அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்