இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியுடன் விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. இந்த நிலையில் அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணியில் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் இந்தியாவின் அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்.
“இந்திய அணி தனது பவுலிங் அட்டாக்கில் வேகத்தை கூட்ட வேண்டியுள்ளது. அதனால் ஆடும் லெவனில் சிராஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா என இருவரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அணி நிர்வாகம் பும்ரா அல்லது புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு கொடுக்கலாம். அது அவர்களுடைய முடிவு. மிடில் ஓவர்களில் இந்திய அணியால் விக்கெட் எடுக்க முடியவில்லை. இவர்களால் அதை செய்யமுடியும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
கடந்த போட்டியில் தவான், கோலி மற்றும் ஷர்துல் தாக்கூர் என மூவரும் அரை சதம் விளாசியும் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3tMcIIfஇந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியுடன் விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. இந்த நிலையில் அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணியில் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் இந்தியாவின் அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்.
“இந்திய அணி தனது பவுலிங் அட்டாக்கில் வேகத்தை கூட்ட வேண்டியுள்ளது. அதனால் ஆடும் லெவனில் சிராஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா என இருவரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அணி நிர்வாகம் பும்ரா அல்லது புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு கொடுக்கலாம். அது அவர்களுடைய முடிவு. மிடில் ஓவர்களில் இந்திய அணியால் விக்கெட் எடுக்க முடியவில்லை. இவர்களால் அதை செய்யமுடியும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
கடந்த போட்டியில் தவான், கோலி மற்றும் ஷர்துல் தாக்கூர் என மூவரும் அரை சதம் விளாசியும் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்