கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழாவில் 7 திரை நீக்கி ஆறுமுறை ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இதனை காண உலகம் முழுவதும் உள்ள சாதுக்கள் வடலூரில் கூடுவார்கள். ஆனால் இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகளால் ஜோதி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வழியாக காணலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வரும் 19ஆம் தேதி காலை 5.30 மணிக்கு காண்பிக்கப்படும் இறுதி ஜோதி தரிசனத்தை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3fwrU3Rகடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழாவில் 7 திரை நீக்கி ஆறுமுறை ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இதனை காண உலகம் முழுவதும் உள்ள சாதுக்கள் வடலூரில் கூடுவார்கள். ஆனால் இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகளால் ஜோதி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வழியாக காணலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வரும் 19ஆம் தேதி காலை 5.30 மணிக்கு காண்பிக்கப்படும் இறுதி ஜோதி தரிசனத்தை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்