அரியலூர் மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த எட்டு மாதங்களாக பெண்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பெண் குழந்தைகள் பாலியல் உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வருவது தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த எட்டு மாத காலமாக, பாலியல் புகார் காரணமாக ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது, பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள் உயிரிழப்பது, பள்ளியில் தீயில் கருகிய நிலையில் பத்து வயது சிறுமி மர்மமான முறையில் இறப்பது என தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான - குற்றங்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17-வயது சிறுமி தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி என்னும் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் விடுதிக் காப்பாளர் அளித்த துன்பறுத்தலால் மனஉளைச்சல் ஏற்பட்டு களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி ஆற்றொணாத் துயரத்தையும், மிகுந்த மன வேதனையையும் எனக்கு அளித்துள்ளதோடுதமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த லாவண்யாவிற்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அவருடைய உறவினர் விசாரித்தபோது மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாக அந்த மாணவி குறிப்பிட்டதாகவும், இதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் ஒருதரப்பு கூறுகிறது. ஆனால், அரசுத் தரப்போ மாணவியின் தற்கொலைக்கும், மத மாற்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறுகிறது. மற்றொரு தரப்பு கழிவறைகளை சுத்தம் செய்தல், விடுதிகளை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை பள்ளி நிர்வாகம் அளித்ததே இந்தத் தற்கொலைக்குக் காரணம் என்று கூறுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் மாணவி இறந்ததற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது.
தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பதை விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனிமேல்
இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3IASB42அரியலூர் மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்