உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க உள்ள மேலும் 85 வேட்பாளர்களின் பெயர்களை பாரதிய ஜனதா அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த அதிதி சிங் மற்றும் ராகேஷ் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்த இருவரும் சோனியா காந்தி எம்பி ஆக உள்ள ரேபரேலியில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி பதவியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஆசிம் அருணுக்கும் தேர்தலில் களமிறங்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதுவரை 195 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிடும் 34 பேர் கொண்ட முதல் பட்டியலையும் பாரதிய ஜனதா அறிவித்துள்ளது. பஞ்சாப்பில் வரும் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங்கின் கட்சியுடனும் சிரோன்மணி அகாலி தளக்கட்சியின் ஒரு பிரிவுடனும் பாரதிய ஜனதா கூட்டணி அமைத்துள்ளது. மொத்தமுள்ள 117 இடங்களில் பாஜக 65 இடங்களிலும் அமரிந்தர் சிங் கட்சி 34 இடங்களிலும் அகாலி தள கட்சி 18 இடங்களிலும் போட்டியிட உள்ளன.
இதையும் படிக்க: சூடுபிடிக்கும் கோவா தேர்தல் களம் - குறிப்பிட்ட சில கட்சிகளை தவிர்க்கும் காங்கிரஸ்..ஏன்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்