சென்னையில் தனியார் நிறுவனத்தில் 47 லட்சம் ரூபாயை கையாடல் செய்து விட்டு, சொந்த ஊருக்கு தப்ப முயன்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.
புது வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தீபன்ராஜ் - யுவராணி தம்பதி, அங்கு 47 லட்சம் ரூபாயை கையாடல் செய்து விட்டதாக, உரிமையாளர் ராஜகணேஷ் காவல்துறையில் புகார் அளித்தார். வேப்பம்பட்டு பகுதியில் வசித்து வந்த அவர்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தீபன்ராஜ் - யுவராணி தம்பதி, சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்கு காரில் தப்ப முயன்றதை அறிந்த காவல் துறையினர், கடற்கரை ரயில் நிலையம் அருகே அந்தக் காரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் 48 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து விசாரித்ததில், கையாடல் செய்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: காணாமல்போன பெண்ணை மீட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3tcxd0kசென்னையில் தனியார் நிறுவனத்தில் 47 லட்சம் ரூபாயை கையாடல் செய்து விட்டு, சொந்த ஊருக்கு தப்ப முயன்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.
புது வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தீபன்ராஜ் - யுவராணி தம்பதி, அங்கு 47 லட்சம் ரூபாயை கையாடல் செய்து விட்டதாக, உரிமையாளர் ராஜகணேஷ் காவல்துறையில் புகார் அளித்தார். வேப்பம்பட்டு பகுதியில் வசித்து வந்த அவர்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தீபன்ராஜ் - யுவராணி தம்பதி, சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்கு காரில் தப்ப முயன்றதை அறிந்த காவல் துறையினர், கடற்கரை ரயில் நிலையம் அருகே அந்தக் காரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் 48 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து விசாரித்ததில், கையாடல் செய்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: காணாமல்போன பெண்ணை மீட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்