இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 2,68,833 ஆக பதிவாகி இருந்த நிலையில், இன்றைய தொற்று பாதிப்பு 2,71,202 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,71,202 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 71 லட்சத்து 22 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு நேற்று 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 66 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 331 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது சிகிச்சை எடுத்துவருவோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 50 ஆயிரத்து 377-ஆக உள்ளது. இந்தியாவில் தினசரி தொற்று விகிதம் 16.66 சதவீதத்தில் இருந்து 16.28 சதவீதமாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க: டெல்லி குடியரசு தின விழா - 24 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3qwWYqp

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்