எதிர்வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரையில் ஆஸ்திரேலிய நாட்டில் 2022 டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். முதல் சுற்றில் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக விளையாடுகின்றன. அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் முதல் சுற்றில் விளையாடுகின்றன. இது தவிர மேலும் நான்கு அணிகள் இந்த சுற்றில் விளையாடும்.
சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நடப்பு டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணியை அக்டோபர் 22 அன்று எதிர்கொள்கிறது. இந்திய அணி அக்டோபர் 23 அன்று பாகிஸ்தான் அணியை எதிர்த்து மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடரின் முதல் போட்டியில் விளையாட உள்ளது.
அதை தொடர்ந்து அக்டோபர் 27 - குரூப் ஏ ரன்னர், அக்டோபர் 30 - தென்னாப்பிரிக்கா, நவம்பர் 2 - வங்கதேசம் மற்றும் நவம்பர் 6 - குரூப் பி வின்னரை சூப்பர் 12 சுற்றில் இந்தியா எதிர்கொள்கிறது.
சூப்பர் 12 சுற்றின் குரூப் 1-இல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2-இல் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 9-ஆம் தேதி நடக்கிறது. இரண்டாவது அரையிறுதி போட்டி நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்