19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், 37 புள்ளி 1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் ரவிக்குமார், 7 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 112 என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய வீரர்களில், ஹர்னூர் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். இந்திய அணி 30 புள்ளி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதையடுத்து வரும் 2 ஆம் தேதி நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/fDER38IyS19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், 37 புள்ளி 1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் ரவிக்குமார், 7 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 112 என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய வீரர்களில், ஹர்னூர் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். இந்திய அணி 30 புள்ளி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதையடுத்து வரும் 2 ஆம் தேதி நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்