கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 15,379 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 13,990 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் தொற்று உறுதியாகும் சதவீதம் 10.3% என உயர்ந்தது. 75,083 பேர் தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். 20 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 3,043 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
விமானம் மூலம் தமிழ்நாடு வந்தவர்களில் 9 பேருக்கும், சாலை மார்க்கமாக தமிழ்நாடு வந்தவர்களில் 40 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 9,159 பேர் ஆண்கள், 6,220 பேர் பெண்கள்.
மாநிலத்தில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 6484 பேர் புதிதாக இன்று தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். செங்கல்பட்டில் 1665, திருவள்ளூர் 893, கோவையில் 863, காஞ்சிபுரம் 580, மதுரை 512, நெல்லை 479, திருச்சி 437.
இணைநோய்கள் இல்லாத இருவர் உயிரிழப்பு
45 வயதான நபர் கடந்த 9 ஆம் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 ஆம் தேதியே கோவிட் தொற்றால் உயிரிழப்பு.
33 வயதான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் இணைநோய்கள் இன்றி 8 ஆம் தேதி கிண்டி அரசு கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 தேதி கோவிட் தொற்றால் உயிரிழப்பு.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்