தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன.
புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் சார்பில் 2 ஆயிரத்து 145 கோடி ரூபாயும், மாநில அரசின் சார்பில் ஆயிரத்து 855 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன. புதிய மருத்துவக் கல்லூரிகளின் மூலம், தமிழ்நாட்டில் கூடுதலாக ஆயிரத்து 450 மருத்துவ இடங்கள் உருவாகியுள்ளன. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார்.
மேலும், இந்திய பாரம்பரியம், செம்மொழிகள் ஆகியவற்றை மேம்படுத்தி பாதுகாக்கும் பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில், சென்னையில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுமையான நிதி உதவி மூலம், 24 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தையும் பிரதமர் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3HURVWKதமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன.
புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் சார்பில் 2 ஆயிரத்து 145 கோடி ரூபாயும், மாநில அரசின் சார்பில் ஆயிரத்து 855 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன. புதிய மருத்துவக் கல்லூரிகளின் மூலம், தமிழ்நாட்டில் கூடுதலாக ஆயிரத்து 450 மருத்துவ இடங்கள் உருவாகியுள்ளன. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார்.
மேலும், இந்திய பாரம்பரியம், செம்மொழிகள் ஆகியவற்றை மேம்படுத்தி பாதுகாக்கும் பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில், சென்னையில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுமையான நிதி உதவி மூலம், 24 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தையும் பிரதமர் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்