இந்தியாவில் ஒமைக்ரான் அலை ஏற்படுமா என்பது இன்னும் 6 முதல் 8 வாரங்களில் தெரிய வரும் என மகாராஷ்டிர மாநில கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய அந்தக்குழுவின் உறுப்பினர் சஷாங்க் ஜோஷி, இந்தியாவில் 2ஆவது கொரோனா அலைக்கு டெல்டா வைரஸ் காரணமானதாகவும் இதையடுத்து தற்போது வந்துள்ள ஒமைக்ரான் வைரஸ் 3ஆவது அலைக்கு காரணமாகுமா என ஆய்வுகள் நடந்து வருவதாகவும் சஷாங்க் ஜோஷி தெரிவித்தார்.
ஒமைக்ரான் வகை கொரோனாவை பொறுத்தவரை இந்தியாவில் அடுத்த 6 முதல் 8 வாரங்கள் மிக முக்கியமானது என்று தெரிவித்த சஷாங்க் ஜோஷி, அதன் பின்பே அவ்வகை வைரஸ் நம் நாட்டில் எது போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதியாக தெரியவரும் என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்