மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகிலுள்ள அயன் பாப்பாகுடி கண்மாய் தண்ணீருடன் கழிவுநீர் கலப்பதால் மலைபோல நுரை பொங்கியுள்ளது. நுரையானது காற்றில் பறந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகிலுள்ள அயன் பாப்பாகுடி கண்மாய் நிரம்பி வெள்ளக்கல் அருகிலுள்ள மடையில் மறுகால் பாய்ந்து தண்ணீர் செல்கின்றது. மதுரையில் பெய்த தொடர் கனமழை காரணமாக இந்த கண்மாய் நிரம்பியுள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயில் கழிவுநீர் கலப்பதன் காரணமாக கண்மாயில் இருந்து வெளியேறும் நீரிலிருந்து அதிகளவில் நுரை வெளியேறி வருகிறது. மதுரை மாநகரின் கழிவுநீரை குழாய்கள் மூலம் அவனியாபுரம் அருகிலுள்ள வெள்ளக்கல் பகுதிக்கு கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்யும் பணி நடைபெறுகின்றது.
மதுரை மாநகராட்சியில் முறையாக அந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் குறிப்பிட்ட அளவு கழிவுநீர் கண்மாயில் கலப்பதாகவும், இதனால் அவனியாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கழிவுநீர் கலந்த தண்ணீரையே விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்
இது தொடர்பாக மதுரை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனைப்படிக்க...ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3rW3qbDமதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகிலுள்ள அயன் பாப்பாகுடி கண்மாய் தண்ணீருடன் கழிவுநீர் கலப்பதால் மலைபோல நுரை பொங்கியுள்ளது. நுரையானது காற்றில் பறந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகிலுள்ள அயன் பாப்பாகுடி கண்மாய் நிரம்பி வெள்ளக்கல் அருகிலுள்ள மடையில் மறுகால் பாய்ந்து தண்ணீர் செல்கின்றது. மதுரையில் பெய்த தொடர் கனமழை காரணமாக இந்த கண்மாய் நிரம்பியுள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயில் கழிவுநீர் கலப்பதன் காரணமாக கண்மாயில் இருந்து வெளியேறும் நீரிலிருந்து அதிகளவில் நுரை வெளியேறி வருகிறது. மதுரை மாநகரின் கழிவுநீரை குழாய்கள் மூலம் அவனியாபுரம் அருகிலுள்ள வெள்ளக்கல் பகுதிக்கு கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்யும் பணி நடைபெறுகின்றது.
மதுரை மாநகராட்சியில் முறையாக அந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் குறிப்பிட்ட அளவு கழிவுநீர் கண்மாயில் கலப்பதாகவும், இதனால் அவனியாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கழிவுநீர் கலந்த தண்ணீரையே விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்
இது தொடர்பாக மதுரை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனைப்படிக்க...ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்