மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
மதுரையில் இன்று நடைபெறவுள்ள அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை மதுரை வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தனது குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வருகை தந்த ஆளுநருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோவிலுக்குச் சென்று சுவாமி, அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்த பின்னர் கோவில்களின் விழாக்கள் மற்றும் பெருமைகள் குறித்தும் கட்டிடக் கலைகள் குறித்து பார்த்தும் கேட்டும் அறிந்தார்.
இதனிடையே, எழுவர் விடுதலையை நிறைவேற்றக் கோரி ஆளுநரை சந்தித்து எழுவர் விடுதலை அமைப்பினர் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியானதால் ஆளுநர் செல்லும் வழியெங்கும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3q3VNxeமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
மதுரையில் இன்று நடைபெறவுள்ள அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை மதுரை வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தனது குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வருகை தந்த ஆளுநருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோவிலுக்குச் சென்று சுவாமி, அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்த பின்னர் கோவில்களின் விழாக்கள் மற்றும் பெருமைகள் குறித்தும் கட்டிடக் கலைகள் குறித்து பார்த்தும் கேட்டும் அறிந்தார்.
இதனிடையே, எழுவர் விடுதலையை நிறைவேற்றக் கோரி ஆளுநரை சந்தித்து எழுவர் விடுதலை அமைப்பினர் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியானதால் ஆளுநர் செல்லும் வழியெங்கும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்