Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

செங்கல்பட்டு: நிரம்பிய நீர் நிலைகள்; வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

https://ift.tt/3G78JsF

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உலக பிரசித்தி பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் உள்ள ஏரியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் நீர் நிரம்பி காணப்படும்.

image

இந்நிலையில், ஆண்டுதோறும் நவம்பர் முதல் வாரத்தில் இருந்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மியான்மர், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளிலிருந்து கூழைக்கடா, வர்ண நாரை, கரண்டிவாயன், நத்தை கொத்தி, நாரை, சாம்பல் நாரை, மிளிர் அரிவாள் மூக்கன், பாம்புத் தாரா, நீர்க்காகம் உள்ளிட்ட 26 வகையான பறவைகள் இறைக்காகவும் இனப்பெருக்கத்திற்காவும் இங்கு வரும்.

இதையடுத்து இந்த சரணாலயத்திற்கு வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்து மே அல்லது ஜூன் மாதங்களில் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் சென்று விடும். இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளதால் விவசாயம் தொடங்கியுள்ளது.

image

இதனால் பறவைகள் சரணாலயத்துக்கு பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்