சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணைக்காக அவரது தந்தை அப்துல் லத்தீப் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
2019 நவம்பர் 9 அன்று சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டினார். பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தியதன் அடிப்படையில், வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. வழக்கு மாற்றப்பட்ட பிறகும் மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களும், செல்போன் பதிவில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி மாற்றப்பட்டது. இதையடுத்து 3 ஐஐடி போராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் மாணவர்களுக்கான பிரச்னை குறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதன் பிறகு பாத்திமா வழக்கு 2019-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 174 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் (இயற்கைக்கு மாறான மரணம்) வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ம்தேதி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் சந்தித்து தனது மகளின் மரணத்திற்கு நியாயம் கேட்டு முறையீட வந்தார். ஆனால் சிபிஐ அதிகாரிகள் அவரை சந்திக்க மறுத்து விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி தந்தை அப்துல் லத்தீப்பிற்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி இன்று காலை அவர் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3Inkai1சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணைக்காக அவரது தந்தை அப்துல் லத்தீப் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்