Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

"அனுபவம் இல்லாதவர்கள் பிரசவம் பார்ப்பது ஆபத்து" - எச்சரிக்கும் மருத்துவர்கள்

https://ift.tt/32dzU6Q

அனுபவம் இல்லாமல் பிரசவம் பார்ப்பது மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே யூ-டியூபை பார்த்து, மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற ஆபத்தான செயல்கள் மூலம் பெண்களின் உயிர்களை பணயம் வைக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

image

நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரது மனைவி கோமதிக்கு கடந்த 18ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், சகோதரி கீதாவுடன் சேர்ந்து, யூ-டியூபை பார்த்து கணவர் லோகநாதன், கோமதிக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. கோமதிக்கு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் மயங்கினார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆபத்தான முறையில் பிரசவம் பார்த்து தனது மனைவி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கியதோடு, குழந்தையையும் பறிகொடுத்துள்ளார் லோகநாதன். யூ ட்யூபில் இதுபோன்ற மருத்துவம் தொடர்பான பதிவுகளுக்கு தணிக்கை கொண்டுவர வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். இதற்கிடையே குழந்தை உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மணிமாறன் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், கணவர் லோகநாதனை நெமிலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்