Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இந்தியாவில் ஆயிரத்தை கடந்தது ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த தினங்களைவிட நேற்று ஒரு நாளில் அதிகரித்துள்ளது. இதுதொடர்பான மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ள தகவலின்படி கடந்த 24 மணிநேரத்தில், இந்தியாவில் சுமார் 16,764 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவொருபக்கம் என்றால், மறுபக்கம் இந்தியாவில் ஒமைக்ரான் திரிபு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 என அதிகரித்துள்ளது. 

image

இதைத்தொடர்ந்து தொற்று பரவலை தடுக்க பல்வேறு மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இரவு நேர ஊரடங்கு, திரளான மக்கள் ஒரே இடத்தில் குவிய தடை என அது நீள்கிறது. இனி இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகள்கூட விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மாநில வாரியாக ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!

மகாராஷ்டிரா 450, டெல்லி 320, கேரளா 109, குஜராத் 97, ராஜஸ்தான் 69, தெலுங்கானா 62, தமிழ்நாடு 46, கர்நாடகா 34, ஆந்திரா 16, ஹரியானா 14, ஒடிசா 14, மேற்கு வங்கம் 11, மத்திய பிரதேசம் 9, உத்தராகண்ட் 4, சண்டிகர் 3, ஜம்மு காஷ்மீர் 3, அந்தமான் 2, உத்தரப் பிரதேசம் 2, கோவா, இமாச்சல், லடாக், மணிப்பூர், பஞ்சாப்பில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதியாகி உள்ளது. 

அதிகரித்த தினசரி பாதிப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 16,764ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. நேற்று 13,154ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, இன்று 16,000-த்தை தாண்டியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது 91,361 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 7,585 பேர் நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3zgZpQW

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்