உலக திருநங்கை அழகிப் பட்டத்தை வென்றுள்ளார் கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ருதி சித்தாரா. அண்மையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அவருக்கு கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“எனக்காக, நான் சார்ந்துள்ள எனது சமூகத்திற்காக, என் நாட்டிற்காக, உலக திருநங்கை அமைப்புக்காக, ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட என அனைவருக்குமான விருதாக இந்த பட்டத்தை பார்க்கிறேன். ஸ்ருதி சித்தாரா எனும் நான் இப்போது ‘2021-ஆம் ஆண்டில் மிஸ் டிரான்ஸ் குளோபல் டைட்டில் வின்னர்’. இந்த வெற்றியை நான் பெற காரணமாகவும், எனக்கு துணையாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி.
நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளும் நோக்கில் என்னை தயார் படுத்திக் கொண்டிருந்தேன். தற்போது இந்த வெற்றியின் மூலம் அதற்கு நான் விடை கொடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார் மிஸ் டிரான்ஸ் குளோபல் ஸ்ருதி சித்தாரா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்