இன்று நடக்கும் பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடருக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் 3 டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி நடக்கிறது. மும்பையில் நடந்துவரும் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டி முடிந்தபின், இந்திய அணி வரும் 9-ம் தேதி புறப்பட முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்நாட்டுப் பயணத்துக்கு இந்திய அணி செல்லுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து சந்தேகங்கள் நீடிக்கின்றன. இதனால் அணி வீரர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. எனினும் இந்த தொடரை நடத்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. தொடரை இந்தியா ரத்து செய்தால் அந்நாட்டுக்கு கடும் நிதி இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணி திட்டமிடப்படி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநாட்டு வீரர்களுக்காக தென்னாப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி உருவாகியிருக்கும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் (பயோ-பபுள்) மிகுந்த பாதுகாப்பானது என்பதால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நடக்கும் பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடருக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2ZTAVQrஇன்று நடக்கும் பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடருக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் 3 டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி நடக்கிறது. மும்பையில் நடந்துவரும் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டி முடிந்தபின், இந்திய அணி வரும் 9-ம் தேதி புறப்பட முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்நாட்டுப் பயணத்துக்கு இந்திய அணி செல்லுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து சந்தேகங்கள் நீடிக்கின்றன. இதனால் அணி வீரர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. எனினும் இந்த தொடரை நடத்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. தொடரை இந்தியா ரத்து செய்தால் அந்நாட்டுக்கு கடும் நிதி இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணி திட்டமிடப்படி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநாட்டு வீரர்களுக்காக தென்னாப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி உருவாகியிருக்கும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் (பயோ-பபுள்) மிகுந்த பாதுகாப்பானது என்பதால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நடக்கும் பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடருக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்