பாகிஸ்தானில் இலங்கை தொழில் அதிபர் படுகொலை செய்யப்பட்டு கொளுத்தப்பட்டதைக் கண்டித்து, கொழும்பு நகரில் பாகிஸ்தான் தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியல்கோட் நகரில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமாரா தொழில் தொடங்கி, பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரை ஒரு கும்பல் கொன்று தீவைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து கொழும்பு நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன், சிங்கள தேசிய ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவரை எரித்து கொன்ற சம்பவத்திற்காக எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்