Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஈபிஎஸ் காரை வழிமறித்த அமமுகவினர் - ஜெயலலிதா நினைவிடத்தில் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு

https://ift.tt/3xXrprO

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக - அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

ஜெயலலிதாவின் 5ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் கூடியிருந்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒருபுறம் அக்கட்சியினர் முழக்கங்களை எழுப்ப, மற்றொரு புறம் சசிகலாவுக்கு ஆதரவாக அமமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

image

அப்போது, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமியின் காருக்கு வழிவிடாமல் அமமுகவினர் மறித்து நின்றனர். இதனால், அதிமுக - அமமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. இதையடுத்து காவல்துறையினர் இருதரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்