இந்திய அரசியலில் தற்போது இந்து, இந்துத்வவாதி என்ற இரு வார்த்தைகளுக்கு இடையே தான் போட்டி ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த கட்சியின் மாநாட்டில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, இந்து, இந்துத்வவாதி என்ற இரு சொற்களும் வெவ்வேறான அர்த்தம் கொண்டவை என குறிப்பிட்டார். தான் இந்து என்றும், ஆனால், இந்துத்வவாதி அல்ல என்றும் பேசினார். மகாத்மா காந்தி இந்து, ஆனால் அவரை சுட்ட கோட்சே இந்துத்வவாதி. அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்ற தேடலிலேயே இந்துத்வவாதி தனது முழு வாழ்நாளையும் செலவிடுவதாகவும், அதிகாரத்தை தவிர, வேறு எதன் மீதும் அவர்களுக்கு பற்று இல்லை என்றும் கூறினார்.
இந்தியா இந்துக்களின் நாடு, ஆனால், இந்துத்வவாதிகளுக்கான நாடு அல்ல. அதிகாரத்தை மட்டுமே விரும்பும் இந்துத்வவாதிகளை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, இந்துக்களை மக்கள் அமர வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். யாரையும் அச்சுறுத்தாமல், அனைத்து மதத்தினருக்கும் உரிய மரியாதை தருபவரே உண்மையான இந்து என்றும் ராகுல் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் நெஞ்சில் குத்தாமல் முதுகில் குத்தியிருக்கிறார். அதற்கு காரணம் அவர் ஒரு இந்துத்வவாதி. கடந்த 7 ஆண்டுகளாக நான்கு தொழிலதிபர்களுடன் கைகோர்த்து பிரதமர் மோடி இந்த தேசத்தை பாழாக்கிவிட்டார் என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3EPR3Sdஇந்திய அரசியலில் தற்போது இந்து, இந்துத்வவாதி என்ற இரு வார்த்தைகளுக்கு இடையே தான் போட்டி ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த கட்சியின் மாநாட்டில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, இந்து, இந்துத்வவாதி என்ற இரு சொற்களும் வெவ்வேறான அர்த்தம் கொண்டவை என குறிப்பிட்டார். தான் இந்து என்றும், ஆனால், இந்துத்வவாதி அல்ல என்றும் பேசினார். மகாத்மா காந்தி இந்து, ஆனால் அவரை சுட்ட கோட்சே இந்துத்வவாதி. அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்ற தேடலிலேயே இந்துத்வவாதி தனது முழு வாழ்நாளையும் செலவிடுவதாகவும், அதிகாரத்தை தவிர, வேறு எதன் மீதும் அவர்களுக்கு பற்று இல்லை என்றும் கூறினார்.
இந்தியா இந்துக்களின் நாடு, ஆனால், இந்துத்வவாதிகளுக்கான நாடு அல்ல. அதிகாரத்தை மட்டுமே விரும்பும் இந்துத்வவாதிகளை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, இந்துக்களை மக்கள் அமர வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். யாரையும் அச்சுறுத்தாமல், அனைத்து மதத்தினருக்கும் உரிய மரியாதை தருபவரே உண்மையான இந்து என்றும் ராகுல் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் நெஞ்சில் குத்தாமல் முதுகில் குத்தியிருக்கிறார். அதற்கு காரணம் அவர் ஒரு இந்துத்வவாதி. கடந்த 7 ஆண்டுகளாக நான்கு தொழிலதிபர்களுடன் கைகோர்த்து பிரதமர் மோடி இந்த தேசத்தை பாழாக்கிவிட்டார் என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்