சென்னையில் தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது நூறு ரூபாயாக அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக, தற்போது தக்காளியின் வரத்து, குறைவாக இருப்பதால், விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 45 வாகனங்களில் மட்டுமே தற்போது தக்காளி வரத்து இருப்பதாகவும், இது சென்னையின் தேவையை பூர்த்தி செய்யாது எனவும் தெரிவிக்கின்றனர்.
இதே போல, பிற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போல கத்திரிக்காய் கிலோ நூறு ரூபாய்க்கும், வெண்டைக்காய் 80ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அவரைக்காயின் விலையும் நூறு ரூபாயாக அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் காய்கறிகளின் விலை நிச்சயம் குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க: தனிக் கட்சி தொடங்க திட்டமா? - குலாம் நபி ஆசாத் விளக்கம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்