இதுபோன்ற அபத்தமான கருத்துகளைத்தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறோமா என கேள்வி எழுப்பியுள்ளார் பிரியங்கா காந்தி.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கிலப்பாடத் தேர்வுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய கேள்விகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, கணவனின் பேச்சை கேட்டால்தான் குழந்தைகளின் கீழ்படிதலை தாயால் பெற முடியும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை பெண் விடுதலை அழித்துவிடுகிறது என்பது போன்ற கருத்துகள் வினாத்தாளில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலின பாகுபாடு, பிற்போக்குத்தனம் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் வகையில் சிபிஎஸ்இ வினாத்தாள் இருப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தம்மால் நம்பவே முடியவில்லை; இதுபோன்ற அபத்தமான கருத்துகளைத்தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறோமா என கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக அரசு இந்த பிற்போக்குத்தனமான கருத்துகளை ஆதரிப்பதாக விமர்சித்துள்ள பிரியங்கா காந்தி, இந்த கருத்துகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஏன் இடம்பெற வேண்டும் என்று வினவியுள்ளார். இதனிடையே, 10ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தேர்வு வினாத்தாள், விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய பாடத்திட்டக் குழுவுக்கு அனுப்பப்பட்டுளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அண்மையில் 12 ஆம் வகுப்பு சமூகவியல் தேர்வில், குஜராத் கலவரம் குறித்து கேட்கப்பட்ட கேள்வி, விதிமுறைகளுக்கு எதிரானது என சிபிஎஸ்இ நிர்வாகம் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இனி நாடு முழுவதும் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - யுஜிசி அறிவிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3ESffmKஇதுபோன்ற அபத்தமான கருத்துகளைத்தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறோமா என கேள்வி எழுப்பியுள்ளார் பிரியங்கா காந்தி.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்