சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பயண வழி உணவகத்தில் கூடுதல் விலை மற்றும் தரமற்ற உணவு வழங்குவதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டுரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பயணவழி உணவகம் செயல்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகங்களில் அதிக விலைக்கு தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், குறைந்த விலையில் தரமான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த உணவகம் கடந்த 1990ம் ஆண்டு துவக்கப்பட்டது.
ஆனால் தற்போது அரசுப் போக்குவரத்து கழகத்தின் நிதி சுமை மற்றும் நிர்வாக காரணங்களை காட்டி தனியாரிடமே ஒப்படைத்துள்ளதால் எந்த நோக்கத்திற்காக இந்த உணவகம் உருவாக்கப்பட்டதோ அந்த நிலை மாறி மீண்டும் அதிக விலைக்கு தரமற்ற உணவு விற்பனை செய்யபட்டு வருகிறது. தரமற்ற உணவு, சுகாதாரமற்ற கழிவறை, பழுதடைந்த சாலைகள், சாலையில் வழிந்தோடும் கழிவு நீர் என இந்த உணவகம் முற்றிலும் சுகாதாரமற்ற நிலையிலும் நோய் பரப்பும் மையமாகவும் செயல்படுகிறது.
மேலும் தண்ணீர் பாட்டில், தின்பண்டங்கள், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே, அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்