'விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன்' எனப் பாராட்டு தெரிவித்துள்ளார் இர்பான் பதான்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில், இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனும் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
மும்பை டெஸ்ட் வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. இப்போட்டியில் வீரர்கள் தேர்வு, பந்துவீச்சில் மாற்றங்கள் என கேப்டன் விராட் கோலி அணியை சிறப்பாக வழிநடத்தினார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 பிரிவுகளிலும் சர்வதேச அளவில் தலா 50 வெற்றிகளைச் சந்தித்த முதல் வீரர் என்ற பெருமையையும் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். இதற்காக பலரும் கோலிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில், ''நான் ஏற்கனவே கூறியது போல் விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன். 59.09 என்கிற வெற்றி சதவீதத்துடன் அவர் முதலிடத்தில் உள்ளார்'' என தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: “ரஹானே இந்திய அணியில் நீடிப்பாரா?” - விராட் கோலி பதில்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/31AhkVO'விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன்' எனப் பாராட்டு தெரிவித்துள்ளார் இர்பான் பதான்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில், இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனும் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
மும்பை டெஸ்ட் வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. இப்போட்டியில் வீரர்கள் தேர்வு, பந்துவீச்சில் மாற்றங்கள் என கேப்டன் விராட் கோலி அணியை சிறப்பாக வழிநடத்தினார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 பிரிவுகளிலும் சர்வதேச அளவில் தலா 50 வெற்றிகளைச் சந்தித்த முதல் வீரர் என்ற பெருமையையும் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். இதற்காக பலரும் கோலிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில், ''நான் ஏற்கனவே கூறியது போல் விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன். 59.09 என்கிற வெற்றி சதவீதத்துடன் அவர் முதலிடத்தில் உள்ளார்'' என தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: “ரஹானே இந்திய அணியில் நீடிப்பாரா?” - விராட் கோலி பதில்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்