அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தற்காலிக அவைத்தலைவர் மற்றும் சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை தொண்டர்களே தேர்வுசெய்வார்கள் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிசம்பர் 3 முதல் 4 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் எனவும், அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை டிசம்பர் 5-ஆம் தேதி பகல் 11.25 மணிமுதல் நடைபெறும் எனவும் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
கடைசி விவசாயி படக்குழு மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார்?
டிசம்பர் 7-ஆம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தேர்தல்நடைபெறும் எனவும், அதனைத்தொடர்ந்து தேர்தல் நடைபெற்ற மறுநாளே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்கட்சி தேர்தல் என்பதால் கட்சியின் மூத்த தலைவர்களான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் பொன்னையன் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக செயல்பட உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3poipZfஅதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தற்காலிக அவைத்தலைவர் மற்றும் சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை தொண்டர்களே தேர்வுசெய்வார்கள் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிசம்பர் 3 முதல் 4 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் எனவும், அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை டிசம்பர் 5-ஆம் தேதி பகல் 11.25 மணிமுதல் நடைபெறும் எனவும் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
கடைசி விவசாயி படக்குழு மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார்?
டிசம்பர் 7-ஆம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தேர்தல்நடைபெறும் எனவும், அதனைத்தொடர்ந்து தேர்தல் நடைபெற்ற மறுநாளே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்கட்சி தேர்தல் என்பதால் கட்சியின் மூத்த தலைவர்களான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் பொன்னையன் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக செயல்பட உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்