1971ஆம் ஆண்டு பாகிஸ்தானை இந்தியப் படைகள் வீழ்த்தியதன் 50வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த வெற்றியின் பின்னணி குறித்து இப்போது பார்ப்போம்.
1971ஆம் ஆண்டு டிசம்பர் 16. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். வங்கதேச விடுதலைக்கான போரில் பாகிஸ்தானை இந்தியப் படைகள் வீழ்த்தி வெற்றிபெற்ற நாள்தான் இது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த இந்த போரின் பின்னணி நெடிய வரலாறு கொண்டது.
1947இல் இந்தியா சுதந்திரமடைந்த போது பாகிஸ்தானும் தனி நாடாக உருவெடுத்தது. பெரும்பகுதி பாகிஸ்தான் இந்தியாவின் மேற்கே இருந்த நிலையில் மற்றொரு பகுதி கிழக்கே இருந்தது. அதாவது புவியியல் ரீதியாக பாகிஸ்தான் இரண்டாக பிளவு பட்டிருந்தது. கிழக்கு பாகிஸ்தான் பகுதி மக்கள் தாங்கள் பாகிஸ்தான் அரசால் புறக்கணிக்கப்பட்டதாக கொந்தளித்தனர். கலாசார முரண்பாடுகளும் பாகிஸ்தானின் மேற்கு, கிழக்கு பகுதிகளுக்கிடையிலான பிளவை மேலும் ஆழமாக்கின. இச்சூழலில் கிழக்கு பாகிஸ்தானுக்கு சுயாட்சி அதிகாரம் கோரி 1970ஆம் ஆண்டு போர்க்கொடி உயர்த்தினார் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் முஜிபுர் ரகுமான். மக்களும் இதற்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
போராட்டங்களை அடக்க பாகிஸ்தான் படைகள் கிழக்கு பகுதியில் குவிந்தன. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடியது பாகிஸ்தான். கொடூரக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என வதைக்களமானது வங்காளம். ரத்த பூமியாக மாறிய கிழக்கு பாகிஸ்தானிலிருந்து உயிருக்கு அஞ்சி பல லட்சம் அப்பாவி மக்கள் இந்தியாவிற்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இது இந்தியாவிற்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியது. ஏற்கனவே பாகிஸ்தானின் செயல்களால் பாதிக்கப்பட்டிருந்த இந்தியாவுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மேகங்கள் மெல்ல தென்படத் தொடங்கின. 1971ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இந்தியாவின் விமான தளங்களை பாகிஸ்தானின் 11 விமானங்கள் திடீரென தாக்கின.
இனியும் பொறுக்க கூடாது என முடிவெடுத்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது முழு அளவில் போர் தொடங்க ராணுவ தளபதி சாம் மானெக்ஷாவுக்கு ஆணையிட்டார். உடனடியாக முப்படைகளும் இணைந்து கிழக்கு மற்றும் பாகிஸ்தான் பகுதியில் ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தின. டிசம்பர் 4ஆம் தேதி கராச்சி துறைமுகத்தை நிர்மூலமாக்கியது இந்திய கப்பற்படை. கிழக்கு பாகிஸ்தானின் மண்ணின் மைந்தர்களை கொண்ட முக்திவாகினி படைகளும் இந்தியப் படைகளுக்கு உதவின. அடுத்தடுத்து பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி தந்த இந்தியப் படைகள் டிசம்பர் 15ஆம் தேதி கிழக்கு பாகிஸ்தானின் தலைநகர் டாக்காவை தங்கள் வசம் கொண்டுவந்தன. இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என உணர்ந்த பாகிஸ்தான் தளபதி ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி தோல்வியை ஒப்புக்கொள்ளும் முடிவுக்கு வந்தார். பாகிஸ்தானின் 93 ஆயிரம் வீரர்கள் 50 ஆண்டுகளுக்கு முன் டிசம்பர் 16ஆம் தேதி இந்தியாவிடம் சரணடைந்தனர்.
தங்கள் படைகள் சரணடைவதாக இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தளபதி ஜக்ஜித் சிங் அரோராவிடம் கையெழுத்து போட்டு தந்தார் பாகிஸ்தான் தளபதி நியாசி. பதிமூன்றே நாட்களில் போரில் வெற்றி வாகை சூடிய இந்திய படைகளை வியப்புடன் பார்த்தன உலக நாடுகள். இந்தியாவின் வெற்றியை நாடாளுமன்றத்தில் பெருமிதத்துடன் அறிவித்தார் பிரதமர் இந்திரா காந்தி. கிழக்கு பாகிஸ்தான் இந்தியாவின் உதவியுடன் வங்கதேசம் என்ற பெயரில் புதிய நாடாக உருவானது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3m3XCJx1971ஆம் ஆண்டு பாகிஸ்தானை இந்தியப் படைகள் வீழ்த்தியதன் 50வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த வெற்றியின் பின்னணி குறித்து இப்போது பார்ப்போம்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்