நியூசிலாந்து அணியைவிட 405 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேலின் மாயாஜால சுழலில் சிக்கி 109.5 ஓவர்களில் 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஜாஸ் படேல் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.
இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை துவங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்த நியூசிலாந்து, 28.1 ஓவர்களில் 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து நியூசிலாந்துக்கு பாலோ- ஆன் கொடுக்காமல் இந்திய அணி 2-வது இன்னிங்சை துவங்கியது. 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் எதுவும் இழக்காமல் 69 ரன்கள் எடுத்தது.
மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்களான மயங்க் அகர்வால் 62 ரன்களிலும் புஜாரா 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய அஜாஸ் படேல் 2-வது இன்னிங்ஸிலும் விக்கெட் வேட்டை நிகழ்த்தி வருகிறார்.
கேப்டன் விராட் கோலி 11 ரன்களுடனும், சுப்மன் கில் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணியைவிட 405 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3xTP24Pநியூசிலாந்து அணியைவிட 405 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்