வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதல் டி20 போட்டி நேற்று கராச்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி கிரிக்கெட் உலகில் புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன், முதலில் பந்து வீச விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஸ்வான், 78 ரன்கள் எடுத்தார். ஹைதர் அலி 68 ரன்களும், நவாஸ் 30 ரன்களும் எடுத்தனர்.
201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது வெஸ்ட் இண்டீஸ். 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணி. இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, நடப்பு (2021) ஆண்டில் மட்டும் டி20 கிரிக்கெட்டில் 18 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் ஒரே ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது பாகிஸ்தான். இதற்கு முன்னதாக ஒரு அணி ஒரே ஆண்டில் டி20 போட்டிகளில் 17 வெற்றிகளை பதிவு செய்தது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை படைத்ததும் பாகிஸ்தான் அணிதான்.
2018-இல் டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி 17 வெற்றிகளை பதிவு செய்திருந்தது. தற்போது அந்த சாதனையை பாகிஸ்தானே தகர்த்துள்ளது. நடப்பு ஆண்டில் மேலும் இரண்டு டி20 போட்டிகளில் பாகிஸ்தான் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்