Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஹெலிகாப்டர் விபத்து: மேலும் 10 உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக விமானப்படை அறிவிப்பு

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் அனைவரது உடல்களும் அடையாளம் காணப்பட்டு விட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த 13 பேரில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பிரிகேடியர் லிட்டெர் ஆகியோரின் உடல்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று காலையே மேலும் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட அவர்களின் உடல்களுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

image

மீதமுள்ள 4 பேரின் உடல்கள் கருகிய நிலையில் இருந்ததால், அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்த ஹரிந்தர் சிங், ஸ்கோட்ரான் லீடர் சிங், ஹவில்தர் சத்பால், குர்சேவக் சிங், ஜிதேந்தர் குமார் ஆகியோரின் உடல்கள் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டு விட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது. அவர்களது உடல்கள் டெல்லி கண்டோன்ட்மென்ட் மருத்துவமனை பிணவறையில் இருந்து இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3ykON32

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்