புதுச்சேரியில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு 20 மாதங்களுக்குப் பிறகு பிறகு, இன்று நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன.
கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் நேரடி வகுப்புகளைத் திறக்க உத்தரவிட்டுள்ள அம்மாநில பள்ளிக்கல்வித்துறை, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஒருநாள் விட்டு ஒருநாள் மதியம் வரை மட்டுமே வகுப்புகள் இயங்கும், பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை, பெற்றோரின் அனுமதி கடிதம் அவசியம், ஆசிரியர்களும் ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாணாக்கர்களை வரவேற்கத் தயாராகியுள்ளன. ஏற்கனவே அரை நாள் இயங்கி வந்த 9 முதல் 12 வரையிலான வகுப்புகள், இன்று முதல் முழு நேர வகுப்புகளாக நடைபெறும். பள்ளிகளில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
இதனைப்படிக்க...சென்னை: பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கான பிரெய்லி வடிவில் வெளியான முதல் கவிதை நூல்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்