சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஷ்வர்நாத் பண்டாரி திங்கட்கிழமை பதவி ஏற்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்கும் வரை மூத்த நீதிபதி துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக இருப்பார் என்றும் நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி பொறுப்பேற்ற பிறகு, அவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீடிப்பார் எனவும் குடியரசுத் தலைவர் உத்தரவில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஷ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்க இருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3oJIWzBசென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஷ்வர்நாத் பண்டாரி திங்கட்கிழமை பதவி ஏற்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்கும் வரை மூத்த நீதிபதி துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக இருப்பார் என்றும் நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி பொறுப்பேற்ற பிறகு, அவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீடிப்பார் எனவும் குடியரசுத் தலைவர் உத்தரவில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஷ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்க இருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்