சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதலே சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் பணிக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழை, நேற்றிரவு முதல் மீண்டும் தொடங்கியது. தாம்பரம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, போரூர், கீழ்ப்பாக்கம், சென்ட்ரல், கே.கே.நகர், தியாகராய நகர், அடையார், மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. மீண்டும் மழை பெய்ததால், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் கலக்கம் அடைந்தனர்.
தொடர்புடைய செய்தி: “இங்கயும் ரொம்ப மழை பெய்யுது சார்” - ட்விட்டரில் மாணவருக்கு விருதுநகர் ஆட்சியர் கலகல பதில்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2ZrAtbSசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதலே சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் பணிக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழை, நேற்றிரவு முதல் மீண்டும் தொடங்கியது. தாம்பரம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, போரூர், கீழ்ப்பாக்கம், சென்ட்ரல், கே.கே.நகர், தியாகராய நகர், அடையார், மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. மீண்டும் மழை பெய்ததால், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் கலக்கம் அடைந்தனர்.
தொடர்புடைய செய்தி: “இங்கயும் ரொம்ப மழை பெய்யுது சார்” - ட்விட்டரில் மாணவருக்கு விருதுநகர் ஆட்சியர் கலகல பதில்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்