Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட மூவரை காணவில்லை என புகார் - காவல்துறை விளக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறையினரால் 4 நாள்களுக்கு முன்பு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரை காணவில்லை என உறவினர்கள் புகார் கூறிவந்த நிலையில், அவர்கள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் பிரகாஷ், தர்மராஜ், சக்திவேல் ஆகியோரை காவல்துறையினர் கடந்த 14ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்கள் எந்த காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறாமலும், அவர்களது இருப்பிடத்தைத் தெரிவிக்காமலும் காவல்துறையினர் அலைக்கழித்ததாகப் புகார் கூறினர். மேலும் நவம்பர் 16ஆம் தேதி விசாரணைக்கு இருவரை அழைத்துச் சென்றதாகவும், அவர்களை உடனே விடுவித்து விட்டதாகவும் கூறினர். மூவரின் நிலை குறித்து தெரியவில்லை என மாவட்ட ஆட்சியரிடமும் உறவினர்கள் முறையிட்டிருந்தனர்.

image

இந்நிலையில், சின்னசேலம் காவல் நிலையைத்துக்கு உட்பட்ட 13 திருட்டு வழக்குகளில் மூவருக்கும் தொடர்பிருப்பதாகவும், அவர்களைக் கைது செய்து, மூவரும் அடகு வைத்திருந்த 38 சவரன் நகைகளை மீட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்து வந்திருந்தபோது, அங்கு கூடியிருந்த உறவினர்கள், காவல்துறை வாகனத்தை மறித்தனர். மூவர் மீதும் பொய் வழக்கு போட்டிருப்பதாகவும், கைது குறித்து தகவல் தெரிவிக்காமல் அலைக்கழித்ததாகவும் புகார் கூறி, சிறிது நேரம் போராட்டம் நடத்தினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3CpR0dJ

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்