சென்னை, திருவள்ளூரில் சிவப்பு எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்திருக்கிறது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து 150 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுவைக்கும் சென்னைக்கும் இடையே நாளை காலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 கி.மீ வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம் : நாளை புதுவை - சென்னை இடையே கரையை கடக்கும்
இதுகுறித்து தமிழக வானிலை மையம், தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதுவைக்கும் சென்னைக்கும் இடையே நாளை காலை கரையை கடக்கும். அப்போது 40-50 கிமீட்டர் வேகத்தில் கடற்கரை பகுதிகளில் காற்று வீசும் என்பதால், தென் மேற்கு வங்கக் கடல், வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்கள் நாளை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார். மேலும், சென்னை, திருவள்ளூரில் சிவப்பு எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாகவும், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்