Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

''முக்கியமான விஷயத்தை பேசுவதால் மட்டும் அது நல்ல படமாகாது'' - விமர்சகர் பரத்வாஜ் ரங்கன்

ஒரு படம் முக்கியமான விஷயத்தை பேசுவதால் மட்டும் அது நல்ல படமாகிவிடாது என சினிமா விமர்சகர் பர்த்வாஜ் ரங்கன் தெரிவித்துள்ளார்.

சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படம் வெளியானதும் பல்வேறு தரப்பினர் படத்துக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் படம் தொடர்பாக பாராட்டுகள் குவிந்தன. சிலர் படம் குறித்து விமர்சித்து வந்தனர். அந்த வகையில் ஜெய்பீம் படம் குறித்து விமர்சகர் பரத்வாஜின் விமர்சன பார்வை பொதுத்தளத்தில் பேசுப்பொருளானது. பலரும் பரத்வாஜின் விமர்சனத்துக்கு மாற்று கருத்து தெரிவித்திருந்தனர். சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துகள் பரவிய நிலையில், தனது விமர்சனத்துக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பரத்வாஜ் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் குறித்த தனது விமர்சனப் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை என மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் தங்கன் பேசுகையில், ''ஜெய்பீம் திரைப்படத்தை நான் நெகட்டிவாகவே சொல்லவில்லை. படம் முழுக்க முழக்க பாராட்டப்படவேண்டியது; அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், என்னைப்பொறுத்தவரை நான் ஒரு விமர்சகன். என்னுடைய வேலை படத்தை எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பதை விமர்சிப்பது. படத்துக்கான வடிவத்தில் பொருந்திப்போகிறதா என்பதை விளக்குவது. அப்படிப்பார்க்கும்போது படத்தில் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன.

Roja is not about Kashmir, says Baradwaj Rangan

விசாரணை, க.பெ.ரணசிங்கம், இரண்டு படமுமே காவல்துறையின் கொடூரத்தை உணர்த்தும் படங்கள். இரண்டு படமும், கலைவடிவத்துடன் சிறப்பாகவே படமாக்கப்பட்டிருக்கும். ஜெய்பீம் படத்தை எடுத்துகொண்டால், முதல் காட்சியில் சாதியாக பிரித்து வழக்கு பதிவு செய்யும் சீன் இருக்கும், அதேபோல மற்றொரு இடத்தில் பிரகாஷ்ராஜிடம் அந்த பகுதி மக்கள் பேசும்போது, 'ஸ்கூல்ல என் ரப்பர் காணாம போனா கூட என்னதான் கேக்குறாங்க'னு அந்த பையன் விவரிப்பான்.

ஏற்கெனவே சொல்லபட்ட ஒரு கருத்து மீண்டும் சொல்ல வேண்டிய தேவை என்ன? திரைக்கதையில் தான் எனக்கு பிரச்னை. மற்றபடி படத்தின் கன்டென்ட்டில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எடுத்திருக்கும் விதம் மட்டும்தான் எனக்கு பிரச்னை. ஒரு படம் முக்கியமான விஷயத்தை பேசுவதால் மட்டும் அது நல்ல படமாகிவிடாது. படத்தின் வடிவத்தை விமர்சிப்பது தான் என்வேலை. மணிகண்டன், லிஜோ நடிப்புகள் சிறப்பாக இருக்கிறது என்று என்னுடைய விமர்சனத்தில் நானே சொல்லியிருக்கிறேன்'' என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/30xtdvL

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்